​ஏர் இந்தியா நிறுவன மேலாளரின் கன்னத்தில் அறைந்த ஆந்திர எம்.பி கைதுதிருப்பதி விமான நிலையத்தில் தனக்கும், தன்னுடன் வந்தவர்களுக்கும் விமான பயணத்துக்கு அனுமதி மறுத்ததற்காக ஏர் இந்தியா மேலாளரை கன்னத்தில் அறைந்த ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது.

ஆந்திராவில் கடந்த நவம்பர் மாதம், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த ஜெகன்மோகன் ரெட்டியை வழியனுப்புவதற்காக திருப்பதி விமான நிலையம் வந்த ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டிக்கு விமான போர்டிங் பாஸ் கிடைக்கவில்லை.

இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ராஜசேகரிடம் சென்று தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் விமான பயணத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு அவர் நேரம் முடிந்து விட்டது என்று கூறினார்.இதனால், ஆவேசமடைந்த எம்.பி. ஏர் இந்தியா மேலாளரின் கன்னத்தில் திடீரென அறைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, போலீஸார் மிதுன் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்ட சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.