ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடிவிலங்குகள் நலவாரியம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு அமைப்பை சேர்ந்த 5 ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியிடம் இன்று புதிதாக மனு அளித்தனர். அந்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டின் தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்குமாறு கூறி இருந்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரும் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று மாலை 3 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. நீதிபதிகள் ரமணா மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

மேலும், "ஜல்லிக்கட்டு மீதான தடை தொடரும். தற்போதைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க முடியாது" என்றும் அவர்கள் கூறினர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.