சிங்கப்பூரில் பொங்கல் விழா... தமிழக அரசும் இதை பின்பற்றலாமே...!சிங்கையில் உள்ள குட்டி இந்தியா என்ற பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா, தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிங்கை அரசு, தமிழ் மொழியையும் தமிழர்களையும் மதிக்கும் காரணத்தால் பொங்கல் திருவிழாவிற்கு சிறப்பு முக்கியத்துவம் தருகிறது.

உலகத் தமிழர்களின் ஒற்றைப் பெரும் திருவிழா, பொங்கல் திருவிழாதான் என்பதை சிங்கை அரசு நன்கு அறிந்துள்ளது. அதனால்தான் சிங்கை நகரமெங்கும் பொங்கல் திருவிழா அலங்காரங்களை, பல்வேறு தேசிய இனங்கள் பார்க்கும்படி செய்வதற்கு அனுமதியும் அளித்துள்ளது சிங்கை அரசு.

சிங்கை அரசு, பொங்கல் திருவிழாவின் சிறப்பு குறித்து அறிந்து கொள்ள வழிசெய்துள்ளது. ஆனால் தமிழக அரசோ எந்த நகரங்களிலும் தாமாகவே முன்வந்து பொங்கல் திருவிழா அலங்காரங்களை செய்யவில்லை. மேற்குலக நாடுகளில் அந்தந்த அரசுகள் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை செய்கிறது. அப்படியான ஒரு முன்னெடுப்பை தமிழக அரசு இதுவரை தமிழர் திருவிழாவான பொங்கல் விழாவிற்கு இதுவரை செய்யவில்லை என்பது வேதனை.

சிங்கப்பூரை போன்று தமிழக அரசும், தமிழக நகரங்களில் பொங்கல் திருவிழா அலங்காரங்களை செய்ய முன்வராவிட்டாலும், பொதுமக்களே பொங்கல் அலங்காரங்களை நகரமெங்கும் செய்ய அனுமதி அளித்தாலே பொங்கல் திருவிழா தமிழகத்தில் இன்னும் கனஜோராக களைகட்டும்.

w2

 

w1
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.