அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் மூலம் நடக்கும் பிரசவம் அதிகம்: ஆய்வில் தகவல்தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பு 2015-16-ம் ஆண்டுக்கான சுகாதார சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அரசு மருத்துவமனைகளை விட தனியார் ஆஸ்பத்திரிகளில் சிசேரியன் (ஆபரேஷன் மூலம் பிரசவம்) பிரசவம் 2 மடங்கு அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவர பட்டியலில், திரிபுராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 87.1 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 36.4. சதவீதமும் சிசேரியன் பிரசவம் நடப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல், பீகார் அரசு மருத்துவமனைகளில் 5 சதவீதமும், தனியாரில் 37.1 சதவீதமும், மேற்குவங்காளத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் 74.7 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 37.1 சதவீதமும் சிசேரியன் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில் 36.1 சதவீதமும், தெலுங்கானாவில் 63.2 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் நடக்கிறது.

இந்தியாவில் 10 முதல் 15 சதவீத பிரசவங்கள் மட்டுமே சிசேரியன் முறையில் மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிரசவத்தின்போது சிலருக்கு பிரச்சினை ஏற்படுவதாலேயே இயற்கை பிரசவத்தை தவிர்த்து சிசேரியன் பிரசவம் செய்யப்படுவதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.