முத்துப்பேட்டையில் குப்பைகள் அள்ளாததால் பேரூராட்சி வாசலில் குப்பையைக் கொட்டி த.மு.மு.க நிர்வாகி போராட்டம்.முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு குப்பைகள் சரி வர அள்ளப்படாததால் நகர் முழுவதும் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது.

இதனால் குப்பைகளிலிருந்து பல்வேறு துர்நாற்றங்கள் வீசி வருவதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது மூக்கைப்பிடித்துக் கொண்டு செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் பேரூராட்சி 3-வது வார்டு ரஹ்மத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசல் அருகே சாலையில் நீண்ட நாட்களாக குப்பைகள் தேங்கி உள்ளதால் அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அந்த பகுதியில் பொதுமக்கள் சென்று வர அறுவருப்பாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த த.மு.மு.க முன்னால் நகரத் தலைவர் தாவூது கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புரப்படுத்தக்கோரி பேரூராட்சியில் புகார் தெரிவித்தார். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வரவில்லை.

இதனால் அதிர்ப்தி அடைந்த த.மு.மு.க நிர்வாகி தாவூது நேற்று காலை ரஹ்மத் நகரில் தேங்கியிருந்த குப்பைகளில் 2 சாக்குகளில் அள்ளிக் கொண்டு வந்து பேரூராட்சி வாசலில் கொட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பேரூராட்சி அலுவலர்கள் உடனடியாக குப்பைகளை அகற்றப்படும் என்று உறுதி கூறியதால் தாவூது அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இது குறித்து தாவூது கூறுகையில்: பலமுறை குப்பைகளை அப்புரப்படுத்தச் சொல்லி அழுத்து போய்விட்டது. அதனால் வேறு வழியின்றி குப்பைகளை அள்ளிக் கொண்டு கொட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இனியும் அலட்சியப்படுத்தினால் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கொட்டவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றார்.

மு.முகைதீன்பிச்சை

[gallery columns="1" size="full" ids="30603,30604,30605"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.