விமானத்தின் கழிவறையில் சிகரெட் பிடித்த இந்தியர் அவசரகால கதவை திறந்த ஜெர்மானியர்: இருவரும் கைது.முன்னனி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வழக்கத்திற்கு மாறாக நடந்த இரு வேறு சம்பவங்கள் காரணமாக இந்தியர் மற்றும் ஜெர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அபுதாபியில் இருந்து மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் 9W 585 விமானத்தில் பயணம் செய்த ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்டெச்லர் மும்பையில் விமானம் தரையிறங்கிய பின்னர் அதன் அவசரகால கதவை திறந்துள்ளார்.


உடனடியாக அங்கு வந்த விமான குழுவினரிடம் சும்மா ஜாலிக்காகத்தான் செய்தேன் என்று மழுப்பியுள்ளார். இந்த மழுப்பல் பதிலால் சீரியசான விமானக் குழுவினர் அவரை மத்திய தொழிற்படை போலீசாரிடம் ஒப்படைக்க, கைது செய்யப்பட்ட ஸ்டீவ் மீது தற்போது மும்பையின் சாகர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதேபோல் சிங்கப்பூரில் இருந்து மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் 9W 09 விமானத்தில் பயணித்த ரவி தங்கர் சக பயணிகளின் எச்சரிக்கையையும் மீறி நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதன் கழிவரையில் சிகரெட் பிடித்துள்ளார். மும்பையில் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் கைது செய்யப்பட்ட இவர் மீதும் சாகர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்ததாக ஜெட் ஏர்வேஸ் குறிப்பிட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.