திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு டீ விற்கும் முதியவர்.இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகின்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார். இவர் டீ கடை ஒன்றினை நடத்தி வருகின்றார். தமிழ்பற்றாளரான இவர் திருக்குறள் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். இதனால் தன்னுடைய பெயருக்கு முன்பு திருக்குறள் தங்கவேலனார் என்று சேர்த்துக் கொண்டார்.

மேலும், தன்னுடைய கடையின் முன்பு பலகையில் தினமும் திருக்குறள் ஒன்றினையும் அதற்கான விளக்கத்தையும் எழுதி வருகிறார். இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தனது கடையில் ஒரு டீயை ரூபாய் ஒன்றுக்கு விற்பனை செய்து வருகிறார். ஏராளமானோர் இவரது கடைக்கு வந்து சந்தோஷமாக டீ குடித்து செல்கின்றனர்.

மேலும் பொங்கலை ஒட்டி தனது கடை முன் வைத்துள்ள பேனரில் அற்புதமான கவிதையையும் எழுதியுள்ளார்.

“ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை நீக்கவும்...
இழிந்த சாதி உயர்ந்த சாதி என்ற பேதம் போக்கவும்...
மனிதம் அழிக்கும் மதத்தை நீக்கி மனிதநேயம் காக்கவும்...
மனிதன் படைத்த மனிதம் காக்கும் மறை நூலென்று ஆக்குவோம்...
ஒன்னாச் சேர்ந்து திருக்குறளை ஒவ்வொரு நாளும் படிப்போம்...
உலக மக்களும் திருக்குறளைப் படிக்க வழி வகுப்போம்...
நடந்து முடிந்த வேதனையை நாளும் முயன்று துடைப்போம்!
எழுச்சியோடு எழுந்து நடந்து சாதனையைப் படைப்போம்!
வாழ மட்டும் செய்கிற முயற்சி வள்ளுவம் இல்லை விட்டிடுவோம்...
வள்ளுவம் காட்டும் வாழ்விக்கும் முயற்சியில் வான் முகட்டைத் தொட்டிடுவோம்”


என்பது தான் அந்த கவிதை.

 

12417969_434870273370794_9110789008328269550_n12509520_434870223370799_8195743480274829529_n12523043_434870206704134_3437763008552922950_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.