அமெரிக்காவில் பூஜை செய்வதாக பெண்களிடம் சில்மிஷம்: இந்திய சாமியார்மீது வழக்கு.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் விசேஷ பூஜை செய்வதாக பெண்களிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம், கல்பத்தாரா பகுதியை சேர்ந்த கோகுல நந்தா(63) என்பவர் இங்குள்ள சான்ட்டா கிளாரிட்டா பகுதியில் மருந்துக்கடை நடத்திவரும் வெஸ்ட் ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். தன்னைத்தானே சாமியாராக முன்னிலைப்படுத்திக்கொண்டு சுவாமி கோகுல நந்தா என்ற பெயருடன் வலம் வந்த இவர், வாழ்க்கையில் பிரச்சனைகளோடு தன்னை அணுகிய பல பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கிடைத்த புகார்களையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் இவரை கைதுசெய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஒருலட்சம் டாலர் சொந்த ஜாமினில் வெளியே வந்துள்ள கோகுல நந்தாமீது லாஸ் ஏஞ்சலஸ் உச்ச நீதிமன்றத்தின் கிளையான டாரன்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் ரீதியாக கொடூரமான முறையில் பெண்களை துன்புறுத்தியது, மோசடி உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின்கீழ் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.