சவுதி, ஈரான் பதற்றம்: வளைகுடா நாடுகள் ரியாத்தில் கூடுகின்றன.



சவுதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள பதற்றமான சூழல் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக வளைகுடா கூட்டுறவு பேரவையைச் சேர்ந்த 6 நாடுகளும் சவுதி தலைநகர் ரியாத்தில் கூடுகின்றன.

ஒரு வாரத்துக்கு முன்னர் முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்தே, சுன்னி ஆதிக்க நாடான சவுதிக்கும் அதன் பகைநாடான ஷியா ஆதிக்கம் கொண்ட இரானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.

இரானுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்ட சவுதியின் நடவடிக்கையை வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் இன்னொரு உறுப்பு நாடு மட்டுமே பின்பற்றியுள்ளது.

மற்ற நாடுகளும் இந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் சவுதி அரேபியா வற்புறுத்தும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

நேற்று வெள்ளியன்று, ஐநாவின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பிய இரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜாவட் ஸரிஃப், சவுதி தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் யேமனில் அர்த்தமற்ற போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.