சவுதி அரேபியாவில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிக்கப்படுமா?சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள செஸ் விளையாட்டுக்கு தடை விதிக்க சவுதி அரேபியாவின் தலைமை மதகுரு ஷேக் அப்துல் அஷிஷ் பின்-அப்துல்லா அல்-ஷேக் பிறப்பித்துள்ளார். கடந்த வாரம் டெலிவிஷனில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இந்த ’செஸ்’ விளையாட்டு மக்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. நேரத்தையும், பணத்தையும் வீணாக்கி விரயம் செய்கிறது. இது திருக்குர்ரானால் தடை விதிக்கப்பட்ட ’மைசிர்’ என்ற விளையாட்டுடன் தொடர்புடையது. எனவே இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப் படுகிறது என்று கூறினார்.

ஆனால், மதத் தலைவர் அப்துல்லா அல்-ஷேக்கின் இந்த அதிகாரப்பூர்வ ஆணைப்படி ’செஸ்’ விளையாட்டுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்க முடியாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே மெக்காவில் வருகிற வெள்ளிக்கிழமை ’செஸ்’ விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மதகுரு விதித்துள்ள தடை குறித்து சவுதி ’செஸ்’ சங்கத்தின் சட்டக்குழு கூட்டி விவாதித்தது. முடிவில், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என அதன் தலைவர் முசாபின் தைலி அறிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.