ரஷ்யாவில் இரையாக வந்த ஆடு, புலியின் நண்பனான சம்பவம்.



ரஷ்யாவில் உள்ள பிரைமோர்ஸ்கி சஃபாரி பார்க்கில் வசிக்கிறது அமுர் என்ற 3 வயது சைபீரியப் புலி. பார்க் ஊழியர்கள் புலிக்கு வாரம் இருமுறை முயல்களையும் ஆடுகளையும் வெட்டி, இறைச்சியை புலியின் கூண்டில் வைத்துவிடுவார்கள்.

ஆனால் கடந்த மாதம் புலியின் உணவுக்காக டிமுர் என்ற ஆட்டை உயிருடன் கூண்டுக்குள் அனுப்பி வைத்தனர். “மறுநாள் ஆடு உயிருடன் இருக்கப் போவதில்லை என்று நினைத்தோம். என்ன ஆச்சரியம், இரண்டும் நண்பர்களாகிவிட்டன.

புலியும் ஆடும் ஒன்றாக நடை பயில்கின்றன. ஒன்றாக விளையாடுகின்றன. ஒன்றாக ஓய்வெடுக்கின்றன. புலியையும் ஆட்டையும் வேறு வேறு கூண்டுக்குள் அனுப்பிவைக்க முயன்றோம். புலி இடத்தைவிட்டு நகர மறுத்தது. ஆடு தூங்காமல், சாப்பிடாமல் அடம்பிடித்தது. மறுநாள் ஒரே கூண்டில்விட்ட பிறகுதான் ஆடும் புலியும் இயல்பு நிலைக்கு வந்தன. மீண்டும் நட்பைத் தொடர்ந்தன.

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகும் நட்பு நீடிக்கிறது என்கிறார் பார்க் அதிகாரி. ஆடு, புலியின் கூடாநட்பு நீண்ட நாட்கள் நிலைக்காது. எப்போது புலிக்குப் பசி எடுக்கிறதோ, அன்று ஆடு பலியாகிவிடும். விரைவில் இது நடக்கும் என்கிறார் பயோடைவர்சிடி ஒருங்கிணைப்பாளர் விளாடிமிர் க்ரெவெர்.

புலியும் ஆடும் தலையை இடித்துக்கொண்டு, தண்ணீர் பருகும் காட்சியை உலகில் வேறு எங்கும் பார்த்திருக்க முடியுமா!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.