பட்டுக்கோட்டையில் இருந்து சென்ற தனியார் பஸ்கள் மோதல்: கல்லூரி மாணவி காயம்.பட்டுக்கோட்டையில் இருந்து இன்று காலை தனியார் பஸ் தஞ்சைக்கு வந்தது. எதிரே தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு தனியார் பஸ் சென்றது. இந்த பஸ் ஒரத்தநாடு அருகே உள்ள பருத்திக்கோட்டையில் சென்ற போது இந்த இரு பஸ்களும் திடீரென உரசிக் கொண்டது. இதில் தஞ்சையில் இருந்து சென்ற பஸ்சின் கண்ணாடி உடைந்தது.

அந்த கண்ணாடி பட்டுக்கோட்டை கொண்டி குளத்தை சேர்ந்த அண்ணாத்துரை மகள் அபிராமி (19) கையில் விழுந்தது. இதில் கண்ணாடி குத்தி கை முறிந்தது. அவர் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயம் அடைந்த அபிராமி கல்லூரி மாணவி ஆவார். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்த போது விபத்தில் சிக்கி கொண்டார். இந்த விபத்தில் மேலும் ஒருவரும் காயம் அடைந்துள்ளார். அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடைபெற்றதும் 2 பஸ்களின் டிரைவர்கள் ஓடி விட்டனர். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு பகுதியில் தனியார் பஸ்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் போட்டியில் அடிக்கடி உரசிக் கொள்வதும், மோதிக் கொள்வதும் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.