முத்துப்பேட்டை பேரூராட்சியின் டிராக்டர் டயரை திருடி விற்றது யார்?.. கவுன்சிலர்கள் காரசார விவாதம்..



முத்துப் பேட்டை பேரூராட்சி கூட்டத்தில் டிராக்டர் டயரை திருடி விற்றது யார் என்று கவுன்சிலர்கள் காரசார விவாதம் நடத்தினர். இதனால் பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப் பேட்டை பேரூராட்சி கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். செயல் அலுவலர் குலோதுங்கன், துணைத்தலைவர் அப்துல் வகாப் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதம் வருமாறு:

பாவா பகுருதீன் (சுயேச்சை): பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரில் நல்ல நிலையில் இருந்த புதிய டயரை திருடி விற்பனை செய்து விட்டு பழைய டயரை வைத்துள்ளனர். இந்த செயலை செய்தது யார்?. இது போன்று பேரூராட்சிக்கு சொந்தமான பல பொருட்கள் திருடப் பட்டு வருகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாதது ஏன் என்றார். அப்போது மற்ற கவுன்சிலர்களும் ஒன்று சேர்ந்து இது குறித்து விவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இது குறித்து விசாரணை செய்து சம்மந்தப் பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் மற்றும் செயல் அலுவலர் கூறினர்.

கூட்டத்தில் சமீபத்தில் மறைந்த திமுக முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் முகம்மது ஹனீபா மறைவுக்கு இறங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.