​சிகப்பழகு தராத சோப்பு நிறுவனம் மீது வழக்கு பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு.தங்களின் சோப்பைப் பயன்படுத்தினால் சிகப்பழகு பெறலாம் என்ற வாசகத்துடன் இந்துலேகா நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் மற்றும் அதில் நடித்த மலையாள நடிகர் மம்முட்டி மீது வழக்கு தொடர்ந்த நபருக்கு, இந்துலேகா நிறுவனம் 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கியுள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த சாத்து என்பவர், நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், நடிகர் மம்முட்டி மீதும், இந்துலேகா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.

மம்முட்டி நடித்த விளம்பர படத்தை நம்பி, இந்துலேகா சோப்பை ஓராண்டாக பயன்படுத்தியதாகவும், ஆனால், விளம்பரத்தில் குறிப்பிட்டது போல் சிகப்பழகு கிடைக்கவில்லை என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். பொய்யான ஒரு வாக்குறுதியை அளித்த இந்துலேகா நிறுவனம் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சாத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்ளும் விதமாக, சாத்துவுக்கு, 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக இந்துலேகா நிறுவனம் வழங்கியுள்ளது.

இதனை தனக்கு கிடைத்த வெற்றியாக கருதும் சாத்து, சிகப்பழகு கிடைக்கும் என்பது போன்று பொய் பிரச்சாரம் செய்வதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மம்முட்டி போன்ற பிரபல நடிகர்கள், சமூக அக்கறையின்றி இதுபோன்ற சோப் நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடிக்கக் கூடாது என்றும் சாத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.