முத்துப்பேட்டையில் ம.ம.க. மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி அளித்த பேட்டி.முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் வீணாகிவிட்டது. குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் பெரும் இழப்பை அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். அதேபோல் இந்த மாவட்டங்களில் பல்வேறு பகுதி சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் பொது மக்கள் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி உடனடியாக சாலை சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். மண்ணெண்ணெயை பொதுமக்களுக்கு வழங்கும் முறையை அரசு மாற்ற நினைக்கிறது. இதன் மூலம் கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்கக்கூடிய அபாயம் உருவாகும் என மக்கள் நினைக்கின்றனர். அந்த எண்ணத்தை அரசு கைவிட்டு பழைய முறையில் ரேசன் கடையிலேயே தொடர்ந்து வழங்க வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வருகிற 23–ந்தேதி சென்னையில் கூடும் தலைமை செயற்குழுவில் முடிவு அறிவிக்கப்படும். அதில் மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையும், விருப்பங்களும் தெரிவிக்கப்படும்.

சமீபத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி. பரதனின் இழப்பு மிகுந்த வேதனையை தருகிறது. தொழிற்சங்க வாதியாக இருந்து 93 வயதிலும் மக்களுக்காக ஓய்வு இல்லாமல் உழைத்த ஒரு தலைவர். அவரின் மரணத்தால் துக்கத்தில் இருக்கும் இடதுசாரி கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை அமைப்பு செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல்லா, நகர நிர்வாகிகள் நியாஸ், நபீல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.