முத்துப் பேட்டையில் கார் மோதி மாணவன் காயம்.



முத்துப் பேட்டை குட்டியார் பள்ளி தெருவை சேர்ந்த அல்லா பிச்சை மகன் முகமது முஸ்ரப் (13) இவர் முத்துப் பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள புதுத் தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியில் வந்த மாணவன் முகமது முஸ்ரப் மீது பழைய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்குடி சாலை நோக்கி சென்ற கார் மோதி விட்டு சென்றது.

இதில் காயமடைந்த மாணவனை அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இது குறித்து முத்துப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.