புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்பால் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய பெண் போலீஸ் அதிகாரி.அமெரிக்காவில் உள்ள கொலம்பியா மகாணத்தில் பிறந்த சில மணிநேரமே ஆன புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தைக்கு பெண் போலீஸ் ஒருவர் தாய்ப்பால் கொடுத்து பெண் குழந்தையின் உயிரை காப்பாற்றி உள்ளார்.

எடினேரா ஜிமெனெச் (வயது59) என்பவர் காட்டு பகுதியில் உள்ள பழங்களை பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு எதோ அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. பூனையின் சத்தம் தான் என்று பழங்களை பறித்து கொண்டிருந்தார். சில நொடிகள் செல்ல அது பிறந்த குழந்தையின் சத்தம் தான் என்று கருதி அதன் அருகில் சென்று பார்த்துள்ளார்.

பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று புதரில் வீசப்பட்டு இருப்பதை கண்டார். இது குறித்து அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த பெண் போலீஸ் லூயிசா பெர்ணாண்டாயிசா குழந்தை பசியாலும், காட்டில் கிடந்ததால் உடல் சூடு வெகுவாக குறைந்தும் இருப்பதை உணர்ந்தார்.

குழந்தையின் பசியை போக்க அதற்கு உடனடியாக தாய்ப்பால் கொடுத்தார். அதனை தொடர்ந்து குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. பால் கொடுத்ததால் தான் குழந்தை உயிர் பிழைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்.குழந்தை தற்போது நலத்துடன் இருப்பதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து பெண் குழந்தையை புதரில் வீசிவிட்டு சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய பெண் போலீஸ் அதிகாரியை பணியாற்றும் சக அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். அமெரிக்காவில் கொலம்பியா மகாணத்தில் உள்ள லா மரினாவில் லூயிசா பெர்ணாண்டா போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அண்மையில் இவரும் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.