நெய்வேலி அருகே பரபரப்பு..குழந்தை மாயம்: குறி சொன்ன பெண், மீட்ட வாலிபர்களிடம் போலீஸ் விசாரணை.நெய்வேலி அருகே ஊ.கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயி. இவரது மனைவி கவுதமி. இவர்களுக்கு அனல்யா(4), சுபிக்‌ஷா(2.5) என்ற இருமகள்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சுபிக்‌ஷா காணவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையை தேடும் பணியினை தீவிரமாக மேற்கொண்டனர்.

இதனிடையே குழந்தை சுபிக்‌ஷாவின் வீட்டின் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் தேடினர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் குடும்பத்துக்கு தெரிந்த பெண் ஒருவர், அதே ஊரில் வசித்து வரும் பூங்கா என்ற பெண் குறி சொல்வதாகவும், அவரிடம் இதுபற்றி கேட்டால் குழந்தை இருக்கும் இடத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அதன்பேரில் வெங்கடேசனும், கவுதமியும் அங்கு சென்று அந்த பெண்ணிடம் குறி கேட்டுள்ளனர். அப்போது, அந்த பெண், குழந்தை உங்களது நிலத்தின் அருகே உள்ள பம்ப்செட் அருகே பத்திரமாக உள்ளது. இன்னும் 15 நிமிடத்தில் அங்கு சென்று குழந்தையை மீட்டுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அந்த குழந்தை இறந்துவிடும் என்றும் குறி சொல்லியுள்ளார்.

உடனடியாக அங்கிருந்த 3 இளைஞர்கள் அந்த இடத்துக்கு வயல்வெளி வழியாக சென்று குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஊ.மங்கலம் போலீசார், குறி சொல்லும் பெண் பூங்காவிடமும், 3 வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.