முத்துப்பேட்டையில் உள்ள குளம், வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.முத்துப்பேட்டையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்த செயல் வீராங்கனைகள் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் முகம்மது மிஸ்கின் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் முகம்மது யூசுப் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தது போல் இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு அதிகரித்து தரவேண்டும். திருச்சியில் ஜனவரி 31ம் தேதி மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடும் வகையில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் முத்துப் பேட்டையிலிருந்து அதிகளவில் கலந்து கொள்வது. தமிழக வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு வழங்கிய 1,940 கோடி போதுமானதல்ல. உடனடியாக கூடுதல் தொகையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

முத்துப் பேட்டை கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு தொலை தூர பேருந்துகள், நகர் பகுதிக்குள் வந்து செல்ல வேண்டும். முத்துப் பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடந்து வரும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

முத்துப் பேட்டையில் உள்ள குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். நகரில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்.

சேதமாகியுள்ள பங்களாவாசல் முதல் பேட்டை வரை உள்ள சிமென்ட் சாலையை அகற்றி விட்டு தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னாள் மாவட்ட தலைவர் அன்சாரி, நகர நிர்வாகிகள் முகம்மது மீரா லெப்பை, ஷாஜஹான், சேக்தாவூது, புகாரி, சுகைப்கான், பிர்தவ்ஸ் கான் கலந்து கொண்டனர். மாணவர்கள் அணி செயலாளர் அகமது நயூம் நன்றி கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.