இந்தோனிஷியாவில் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு.இந்தோனிஷியாவில் நீதிபதி இஸ்லாமிய வரம்புக்கு உட்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனிஷியாவில் நீதிமன்றம் சற்று வித்தியாசமான வழக்கை சந்தித்தது.........

வயதான இஸ்லாமிய பெண்மணியொருவர், தோட்டம் ஒன்றில் மரவள்ளிக்கிழங்கு
திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........

"என்னை மன்னிக்கவேண்டும். இஸ்லாமிய சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்ட தவறினால் இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர் மீதும் நான் ஐம்பதாயிரம் ருபாயா (5 டொலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன். காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."

என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயாவை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

இந்த தீர்ப்பானது, இஸ்லாத்தின் நான்காவது கலீபா அலி (ரலி) அவர்களால் கொடுக்கப்பட்ட உண்மையான ஷரீயா தீர்ப்பை ஒத்திருப்பதாகவும், இவ்வாறான நிலைமைக்கு காரணமான சமூகம் தண்டிக்கப்பட வேண்டுமென்பதை குறித்து இத்தீர்ப்பு சுட்டிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது.

ஆதாரம் >>>>>>>>Spirit news- indonesia
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.