வாட்ஸ் அப் உலகம் முழுவதும் இலவசமாகிறது.பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் அப்'-ஐ உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பெரும்பாலும் இதை சார்ந்தே பலரும் இருக்கிறார்கள்.

தற்போது வரை வாட்ஸ் அப்-க்கு ஓராண்டுக்கு பிறகு பயன்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 1 டாலர் சந்தா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இனி இந்த கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் அப்பின் அனைத்து பதிப்புகளுக்கு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் அப்-ஐ பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.