முத்துப்பேட்டை அருகே பெண் தீக்குளிப்புமுத்துப்பேட்டை அருகே உள்ள புன்னலூரை சேர்ந்த ராஜா மனைவி வனிதா (வயது 30). கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த வனிதா தனது உடலில் மண்எண்னை ஊற்றி தீவைத்து கொண்டார்.

இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைகாக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

தீகுளித்து காயமடைந்த வனிதாவுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.