சவுதி அரேபிய காதலருக்கும் ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம்!இன்றைய செய்தித்தாள்களில் சவுதி அரேபிய காதலருக்கும் ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. அப்படி அது போல் நடந்திருந்தால் அவர் உண்மையான இஸ்லாமியராக இருக்க வாய்ப்பில்லை. இப்போது செய்தியை பார்ப்போம்.

காதல்... மதம், இனம் , மொழி, கடந்தது என்பதை நிரூபிக்கும் விதத்தில் குஜராத்தில் சவுதி அரேபிய ஆணுக்கும், ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் கிஷான் தோலியா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க கிஷான் தோலியாவின் அரேபிய நண்பர் ஹமீத் அல் ஹமாத் தனது ரஷ்யத் தோழியான ஜுலியானாவுடன் சூரத் வந்திருந்தார்.

ஹமித் சாப்ட்வேர் இன்ஜினியராக சீனாவில் பணியாற்றுகிறார். ஜுலியானா ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபடுபவர். இருவரும் சீனாவில்தான் வசித்து வருகின்றனர். சூரத்தில் இந்து கலாச்சாரப்படி கிஷான் தோலியாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனை பார்த்த ஹமித்துக்கும் ஜுலியானாவுக்கும் இந்து முறைப்படிதான் தங்களது திருமணம் நடக்க வேண்டுமென்ற ஆசை மனதுக்குள் பற்றிக் கொண்டது. தங்களது விருப்பத்தை நண்பரான கிஷான் தோலியாவிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆச்சரியமடைந்த கிஷான், தனது நண்பர் மற்றும் தோழியின் விருப்பத்தை நிறைவேற்றவும் ஒப்புக் கொண்டார். சவுதி அரேபிய மாப்பிள்ளைக்கும் ரஷ்ய கிறிஸ்தவ பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடத்த சூரத்தில் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடுகளை செய்தார் கிஷான். இருவருக்கும் திருமணம் செய்ய நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இருவருக்கும் நேற்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை ஹமீத் அல் ஹமாத் ஷெர்வனி அணிந்திருந்தர். மணமகள் பட்டுப்புடவை கட்டி, கழுத்தில் தங்க நகைகள் அணிந்து இந்திய மணமகளாகவே காட்சியளித்தார். தொடர்ந்து புரோகிதர்கள் மந்திரம் ஓத மணமகள் ஹமீத் மணமகள் ஜுலியானா கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் சூரத் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை மனதாரா வாழ்த்தினர். இந்திய முறைப்படி திருமண விருந்தும் வழங்கப்பட்டது.

''இங்கு நண்பரின் திருமணத்திற்கு வந்த போது இந்திய கலாச்சார முறை எனக்கு மிகவும் பிடித்து போனது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கலாச்சாரப்படி திருமணம் செய்ய நானும் ஜுலியானாவும் உடனடியாக முடிவு செய்தோம் ''என மணமக்கள் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.