முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச்செயலாளர் முகம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கல்வி மற்றும் அரசின் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு, முஸ்லீம்களின் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழக அரசிற்கு தொடர்ச்சியாக அறிவுறுத்திக் கொண்டே வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் போதும் முதலமைச்சர் ஜெயலலிதா முஸ்லீம்களின் தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் இந்நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.