திருத்துறைப்பூண்டி அருகே ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த கணவர் மீது இளம்பெண் போலீசில் புகார்.திருத்துறைப்பூண்டி அருகே ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்து கொண்ட கணவர் மீது மனைவி போலீசில் புகார் செய்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்த குமார்(30). புதுக்கோட்டையை சேர்ந்தவர் சங்கீதா(27, பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன).

இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வாரத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறால் சங்கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந் நிலையில் சமீபத்தில் புதுக் கோட்டை எஸ் பி யிடம் சங்கீதா ஒரு புகார் மனு அளித்தார். அதில், எனது கணவருக்கு ஆண்மைக் குறைவு உள்ளது. இதனால் அவர் இல்லற வாழ்க்கைக்கு தகுதி அற்றவர். ஆனால் இதை மறைத்து என்னை திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கிறார் என கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு தற்போது திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப் பட்டது.

இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப் பதிந்து நந்தகுமார் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.