துபாயில் தீ பிடித்த கட்டிடத்திலிருந்து தப்பியவர்களின் பொருள்கள் பத்திரமாக ஒப்படைப்பு.துபாயின் சொகுசு ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்னர் தீ ஏற்பட்டது. அட்ரஸ் டவுண் டவன் எனும் 63 மாடிகளைக் கொண்ட அந்த ஹோட்டலின் பக்கவாட்டில் தீ எரிந்தது.

இச்சம்பவத்தில் குறைந்தது 16 பேர் காயமடைந்தனர். துபாயில் புத்தாண்டு பிறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாக 63 மாடிக் கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் சிலர் காயமடைந்தாலும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தீயணைப்பு படையினர் அங்கே தங்கி இருந்தவர்களை பத்திரமாக வெளியேற்றினார்கள். பலர் அலறி அடித்துகொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடினார்கள். அப்படி ஓடியவர்களில் சவூதி நாட்டை சேர்ந்த மிகப்பெரிய செல்வந்தர் குடும்ப பெண்ணும் ஒருவர்.

தீ அனைத்த பிறகு அந்த சவுதி பெண், தான் தங்கி இருந்த அறையில் விட்டு சென்ற பொருள்கள் இருக்குமோ இருக்காதோ என்ற கவலையுடன் ஹோட்டலுக்கு சென்றவருக்கு ஆச்சரியம். அவர் விட்டு சென்ற பொருள்களை பிளாஸ்டிக் பையில் போட்டு, அவர் பெயர் எழுதி பத்திரப்படுத்தி வைத்து இருந்தார்கள் ஹோட்டல் நிர்வாகத்தினரும், தீயனைப்பு படை வீரர்களும்.

அந்த பொருள்கள் என்ன தெரியுமா?... இரண்டு மில்லியன் திர்ஹம் பணம், நிறைய தங்க ஆபரணங்கள். அதில் ஒன்று கூட குறைவில்லாமல் திரும்ப அவரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இது போன்று சுமார் 350 நபர்களின் உடமைகளையும் அப்படியே திரும்ப ஒப்படைத்துள்ளார்கள்.

தீ பிடித்தபோது, பட்டத்து இளவரசர் தீயணப்பு வீரர்களின் உடையணிந்து ஸ்பாட்டில் நின்று உதவி செய்துள்ளார். துபாய் மன்னர் நேரில் சென்று பார்வையிடுகிறார். காயம் பட்டவர்களுக்கு உதவி செய்கிறார். நடப்பது மன்னர் ஆட்சி! ஆனால், மனித நேயமும், நாட்டு மக்களின் மீது உள்ள அக்கரையும் ஆட்சியின் நல்லாட்சி தத்துவத்தை பறைசாற்றியது.


ஹாஜா தீன்

தீ பிடித்து எரிந்த ஹோட்டல்.

943419_1284319918252163_4639361464189419595_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.