முத்துப்பேட்டையில் அனைத்துக்கட்சி கூட்டம். ரயில்வே துறையை கண்டித்து.முத்துப் பேட்டை ரயில் நிலையம் பழமை வாய்ந்ததாகும். இந் நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன் அகல ரயில் பாதை பணிக்காக இப் பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப் பட்டது. தற்போது பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில் அதை விரைந்து முடிக்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந் நிலையில் பி கிரேடாக இருந்த முத்துப் பேட்டை ரயில் நிலையத்தை தரம் குறைத்து சி கிரேடாக மாற்ற தென்னக ரயில் வேத்துறை முயற்சி செய்து வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இப் பகுதி மக்கள் பல் வேறு போராட்டங்களை நடத்தினர்.

சமீபத்தில் கரூரில் உள்ள அவரது இல்லத்தில் பாராளு மன்ற துணை சபாநாயகர் தம்பித் துரையிடம் முத்துப் பேட்டை தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் இது தொடர்பான எந்த அறிவிப்பையும் ரயில் வேத்துறை அறிவிக்க வில்லை.

இதையடுத்து ரயில்வே துறையின் செயலை கண்டித்தும், அடுத்த கட்ட நிலையை அறிவிக்கவும் வருகிற 23ம் தேதி முத்துப் பேட்டையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.

இது குறித்து தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க முத்துப் பேட்டை பகுதியை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் ரயில் வேத்துறை இப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தை தரம் குறைக்க முடிவு செய்துள்ளது. வருகிற 23ம் தேதி மாலை 3 மணிக்கு முத்துப் பேட்டை கொய்யா மஹாலில் அனைத்து கட்சி மற்றும் அனைத்து அமைப்புகள் கூட்டம் நடக்கிறது என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.