அதிராம்பட்டினம் மாணவி தற்கொலை.தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கித் தெருவைச் சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் சங்கர் மகள் சுலோச்சனா (19). இவர், இங்குள்ள அரசு உதவிபெறும், இருபாலர் பயிலும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.


இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கல்லூரியில் குடியரசு தின விழா நடந்தபோது, கல்லூரியின் ஓய்வறைக்குச் சென்ற சுலோச்சனா அங்குள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து தகவலறிந்து வந்த சுலோச்சனாவின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் குடியரசு தின விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதிராம்பட்டினம் போலீஸார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மாணவியின் பெற்றோர், கல்லூரி முதல்வர், என்சிசி அலுவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.


என்சிசி பிரிவிலுள்ள சீனியர் மாணவிகள் சிலர் பயிற்சியளிக்கும்போது சுலோச்சனாவைத் திட்டுவது, கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி சுலோச்சனா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.


தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை சங்கர் புகார் அளித்துள்ளார்.POLIMER NEWS_20160127_0332.ts_snapshot_00.02_[2016.01.27_07.33.26] POLIMER NEWS_20160127_0332.ts_snapshot_00.04_[2016.01.27_07.32.24]

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.