இஸ்லாமியர்களுக்கு அளித்த வாக்குறுதியை ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. தவ்ஹீத் ஜமாத் தலைவர் பேட்டிதேர்தலுக்கு முன் முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற வில்லை என்று இந்திய தவ்ஹித் ஜமாத் மாநில தலைவர் பாக்கர் கூறினார்.

நேற்று நாகூரில் அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதா முதல்வராவதற்கு முன்பே அவரை சந்தித்து, தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். திருமண பதிவு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

அப்போது உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்று உறுதி அளித்தார். மேலும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களிலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.ஆனால் 5 ஆண்டுகளாகியும் எங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய 4 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. தற்போது அந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில், வெளிநாட்டு சதி, ஆர்.டி.எக்ஸ் போன்ற பொருட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதால் மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் விடுதலை செய்ய முடியும். அவை அல்லாத வழக்குகளில் மாநில அரசுக்கு விடுதலை செய்ய அதிகாரம் இருக்கிறது என்று அறிவித்துள்ளது.

எனவே தமிழக அரசு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். 14 ஆண்டுகளுக்கும் மேலாக 53 முஸ்லிம்கள் சிறையில் உள்ளனர். இப் பிரச்சினை தேர்தலின் போது எதிரொலிக்கும். சென்னையில் வரும் மார்ச் 6ம் தேதி எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடை பெறுகிறது. அதில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.