சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண ராமன் கைது.



முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் செய்த சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண ராமனை கைது செய்து சென்னை மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறுபான்மையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த டிசம்பர 30 அன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் திருமிகு டி.கே. ராசேந்திரன் இ.கா.ப. அவர்களிடம் நேரில் முறையிட்டோம்.

கல்யாண் ராமன் கடந்த டிசம்பர் 26 மாலை 6.01 மணிக்கு அவரது முகநூலில் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை தொடர்புபடுத்தி ஒரு அவதூறு பதிவுச் செய்திருந்தார். இதனை சுட்டிக் காட்டி நமது புகார் அளிக்கப்பட்டது.

நமது புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல்துறை அதன் அடிப்படையில் சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை பதிவுச் செய்து இன்று அதிகாலை கல்யாண் ராமனை கைதுச் செய்து அவரை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

கடந்த ஹஜ் புனித யாத்திரையின் போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் முகநூலில் அது குறித்து வெறுப்பு பிரச்சார பதிவிட்டார். இது குறித்து திருமங்கலம் தமுமுக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைதுச் செய்யப்பட்டார். இப்போது மனிதநேய மக்கள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கல்யாண் ராமன் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

முகநூலில் வெறுப்பு பிரச்சாரத்திற்கு இடம் இல்லை என்பதை உணர்த்திய தமிழக காவல்துறைக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்.

ஜவாஹிருல்லா M.H.

வீடியோவைக்காண......

https://www.facebook.com/931323463567841/videos/1108155722551280/?video_source=pages_finch_main_video&theater
Share on Google Plus

1 comments:

  1. Vijayaramachandran.JJanuary 10, 2016 at 5:57 PM

    இவரை கைது செய்தது சரியே..அதே முக நூலில் மாற்று நம்பிக்கை யினரை கேவலாமாக சித்தரிக்கும் இசுலாமியர்களை கைது செய்ய கோருவீர்களா?

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.