​மனிதநேயக் கட்சிக்குள் உட்கட்சி பூசல்: தமிமூன் அன்சாரியின் அலுவலகம் சூறை.மனித நேய மக்கள் கட்சியில் கோஷ்டிப் பூசலின் உச்சகட்டமாக, சென்னையில் தமிமூன் அன்சாரியின் தலைமை அலுவலகத்தை இன்று மர்ம நபர்கள் சூறையாடினர்.

மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும், பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, கட்சிக்குள் பிளவுபட்டு, இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிமூன் அன்சாரி பிரிவின் அமைப்பு செயலாளர் தைமியா நேற்று தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில், மனித நேயக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஜவாஹிருல்லாவை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புதுப்பேட்டையில் உள்ள தமிமூன் அன்சாரியின் கட்சி அலுவலகத்தில் மர்மநபர்கள் புகுந்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஜவாஹிருல்லாவின் ஆதரவாளர்கள் தான் காரணம் என்று, தமிமூன் அன்சாரியின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுதொடர்பாக, தமிமூன் அன்சாரி தரப்பினர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோவைக்காண........
https://www.facebook.com/513672162125841/videos/553043528188704/?video_source=pages_finch_main_video&theater
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.