சிறுமி காதிலிருந்து வரும் கட்டெறும்புகள். டாக்டர்கள் திணறல்.குஜராத் சிறுமியின் காதில் இருந்து அவ்வப்போது கட்டெறும்புகள் வந்த வண்ணம் உள்ளது. காதுக்குள் கட்டெறும்பு எப்படி உற்பத்தியாகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

குஜராத் மாநிலம், அகமதாபாத், தீசா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் டர்ஜி. இவரது மகள் ஸ்ரேயா டர்ஜி(12)காதில் அரிப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார். இதனால் மகளை அழைத்து காதை பார்த்த சஞ்சய், காதில் எறும்புகள் இருப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அருகில் உள்ள இஎன்டி மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்றனர். சிறுமியின் காதை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காதில் இருந்து சுமார் 10 கட்டெறும்புகளை வெளியே எடுத்தனர்.


இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மீண்டும் காதில் அரிப்பு ஏற்படுவதாக சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதனைதொடர்ந்து பெற்றோர் அவரை இன்என்டி சிறப்பு மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

சிறுமியின் காதில் இருந்து மீண்டும் அதேபோல் கட்டெறும்புகள் வெளியே எடுக்கப்பட்டது. லெப்ராஸ்கோபி கேமரா மூலமாக காது சோதனை செய்யப்பட்டது. எனினும் ஸ்ரேயா காதில் எறும்புகள் எப்படி உற்பத்தியாகிறது என்பதை கண்டறிய முடியவில்லை.


இது தொடர்பாக மருத்துவர் ஜவஹர் தல்சானியா கூறியதாவது, ‘‘மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வை பார்த்தது கிடையாது. தொடர்ந்து காதில் இருந்து எறும்புகள் வெளியேறினால், சிறுமியை வீடியோ கண்காணிப்பில் வைத்து பராமரிக்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்” என்றார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.