முத்துப்பேட்டை பேரூராட்சியின் அலட்சியத்தால் சிறுமி பலி. இருவர் பலத்த காயம். படங்கள் இணைப்பு.இன்று மதியம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரில் உள்ள குப்பைகளை இ.சி.ஆர் சாலையில் (சரஸ்வதி வித்யாலையா பள்ளி அருகில்) கொட்டி அந்த குப்பைகளை எரித்து உள்ளனர். இதில் ஏற்பட்ட புகை சாலையில் பரவி சாலைகளே தெரியாத அளவிற்கு மூடியுள்ளது.

அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த மினி லாரி சாலையில் நிறுத்தியிருந்த பேரூராட்சி டிராக்டர் மீது பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் அவ்வழியே அதிரை கருங்குளம் முடுக்காட்டிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த விக்னேஷ் தன் அக்காள் சத்தியா, அக்காவின் மகள் பவிஷா (4) ஆகிய மூவரோடு வந்த இரு சக்கர வாகனம் மினி லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் அக்கா மகள் பவிஷா தூக்கி வீசப்பட்டு உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த அக்கா மற்றும் தம்பி விக்னேஷ் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் விக்னேஷ்கிற்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

சிறுமியின் உடல் போஸ்ட்மார்டம் செய்ய திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பேரூராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்ததாகவும், இந்த விபத்திற்கு காரணமாக அமைந்த பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கைது செய்ய பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

விபத்தில் இறந்த பவிஷாவின் தந்தை சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார் .

புகைப்படம்.. சுனா இனா சுல்தான் இப்ராஹிம்.

[gallery columns="2" ids="30057,30058,30059,30060,30061,30062,30063,30064,30065,30066,30067,30068,30069,30070,30071,30072,30073,30074,30075,30076"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.