முத்துப்பேட்டை அருகே போதை டிரைவர் ஓட்டிய கார் மோதி தொழிலாளி பலி.முத்துப் பேட்டை அடுத்த தம்பிக் கோட்டை கீழக்காடு வடக்கு அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் வீரையன் (45). தேங்காய் வெட்டும் தொழிலாளி.

நேற்று மதியம் வேலை முடிந்து வீடு திரும்ப சுந்தரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப் பூண்டியிலிருந்து பேராவூரணி நோக்கி வந்த கார், வீரையன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயம் அடைந்த வீரையன் உயிருக்கு போராடிக் கொண்டிருந் தார். அப்பொழுது அங்கு நின்ற சிலர் டூவீலர்களில் விரட்டிச் சென்று நிற்காமல் சென்ற காரை தம்பிக் கோட்டை முக்குடு சாலை அருகே மடக்கி பிடித்து டிரைவரை சரமாரி அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தில் திரண்ட மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரையனை மருத்துவ மனைக்கு தூக்கி செல்ல நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர் அதே இடத்தில் இறந்து விட்டார்.

தகவல் அறிந்த முத்துப் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் வேத ரத்தினம் மற்றும் போலீசார் சென்று வீரையன் உடலை திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்திற்கு காரணமான காரை பறிமுதல் செய்து அதன் டிரைவர் கரம்பயத்தை சேர்ந்த நீலகண்டன் மற்றும் காரில் வந்த பேராவூரணியை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை கைது செய்து விசா ரணை மேற் கொண்டுள்ளனர்.

கார் டிரைவர் போதையில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.