குடிகார பயணியை மனைவியுடன் இறக்கிவிட்ட விமான நிறுவனம்.டெல்லியிலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 6E-155 விமானம், 162 பயணிகளுடன் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை புறப்படத் தயார் நிலையில் இருந்தது.

அப்போது, விமான குழுவைச் சேர்ந்த ஒருவர் பயணிகளில் ஒருவர் பேசக் கூட முடியாத அளவிற்கு மிதமிஞ்சிய போதையில் இருப்பதைக் கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அவரால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவரும் அவரது மனைவியும் டெல்லி விமான நிலையத்திலேயே இறக்கி விடப்பட்டதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லியில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் மற்றொரு விமானம் முலம் தம்பதியர் இருவரும் இன்று மதியம் மும்பை வந்தடைந்ததாகவும் இண்டிகோ ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.