பஹ்ரைன், யுஏஇ யைத் தொடர்ந்து கத்தாரும் அதிரடியாக ஈரானுடன் தூதரக உறவை துண்டித்தது.தனது நாட்டு தூதரகங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல்களை அடுத்து, ஈரானுடனான தூதரக உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டுள்ளது.

ஷியா பிரிவு மத குரு ஷேக் அல் நிமர் உள்பட 47 பேருக்கு சவுதி அரசு இரு தினங்களுக்கு முன் ஒரே நாளில் மரண தண்டனையை நிறை வேற்றியது. இதற்கு ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் ஈரான், ஈராக் நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

அங்கு சவுதியை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் வெடித்தன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் தீயிட்டு கொளுத்தப் பட்டது. ஈரானிலுள்ள சவுதி துணை தூதரகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டது.

இந்த சம்பவங்களை அடுத்து, ஈரானுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக சவுதி அரோபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல்-அல்-ஜூபைர் தெரிவித்தார். மேலும், 48 மணி நேரத்துக்குள் சவுதியிலுள்ள ஈரான் தூதரக அதிகாரிகள், சொந்த நாட்டுக்கு திரும்பி விட வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஷியா மதக்குருவின் மரணத்துக்காக சவுதி அரேபியா வருந்த நேரிடுவதுடன் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என ஈரானின் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரித்துள்ளார்.

பஹ்ரைனும் ஐக்கிய அரபு குடியரசும் ஈரானுடன் தூதரக உறவை துண்டித்துள்ளது. தற்போது சவுதி ஆதரவு நாடான கத்தாரும் ஈரான் உடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்ளும் விதமாக அந்நாட்டிற்கான தனது தூதரை திரும்ப அழைப்பதாக கத்தார் அறிவித்துள்ளது.

இது தொடர்பாகா அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக இயக்குனர், காலித்- பின் இப்ராகிம் அல்-ஹாமர் வெளியிட்டுள்ள அறிகையில் “ ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஈரானில் இருக்கும் கத்தார் தூதரை திரும்ப அழைத்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.