ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது. தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்:ஐக்கிய அமீரக நாடுகளில் நிறுவனங்கள் தொழிலாளர்களுடன் போடும் பணி ஒப்பந்தத்தின் அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் நலன் கருதி பணி ஒப்பந்தம் உள்ளிட்ட மூன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வேலை ஒப்பந்த சட்டத்தின்படி, இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு அயல்நாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் / ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். மேலும், அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேலை விபரங்கள், சம்பள விபரங்கள், வேலை நேரங்கள் போன்றவை குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இப்புதிய சட்டங்கள் புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் நலத்துறை மந்திரி அறிவித்திருந்தார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

தாய் மொழியில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதன் மூலம் படிப்பறிவு குறைவான தொழிலாளர்களும் தங்களின் அடிப்படை உரிமைகள், வேலை விபரங்கள், சம்பள விபரங்கள் போன்றவற்றை அறிந்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

12512801_105826512507177_1058265
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.