முத்துப்பேட்டை அருகே தி.மு.க பிரமுகர்கள் வீடுகளில் நள்ளிரவில் அதிரடி சோதனை.தி.மு.க முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள்.

முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் துறைத்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்துரை (38). முன்னாள் தி.மு.க ஒன்றிய கவுன்சிலரான இவர் புதன்கிழமை வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிரடிபடைப் போலீசார் திடீரென்று வேல்துரை வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்.

இதில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி முகத்தில் லைட் அடித்து அடையாளம் பார்த்தனர். மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வேல்துரையின் மனைவி மற்றும் அவரது பெற்றோரிடமும் வேல்துரை பற்றி விசாரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எதற்காக போலீசார் சோதனைப் போட்டார்கள்? அதும் நள்ளிரவில் சோதனையில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன? வேல்துரை மீது எந்தவித வழக்கும் இல்லாத நிலையில் அவரை ஏன் நள்ளிரவில் போலீசார் தேடி வர வேண்டும்? வேல்துரையின் கடை காவல் நிலையம் அருகில் இருக்கும் நிலையில் போலீசார் வீட்டிற்கு வந்ததற்கான காரணம் என்ன? என்ற பல்வேறு சந்தேகங்கள் வேல்துரை உறவினர்களிடமும் கிராமமக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தி.மு.க பிரமுகர் வேல்துரை வீட்டில் நள்ளிரவில் போலீசார் சோதனைப் போட்ட செய்தி பரவியதால் வியாழக்கிழமை ஏராளமான தி.மு.கவினர் வேல்துரை வீட்டு முன்பு கூடினர். இதனால் மேலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வேல்துரை கூறுகையில்: போலீசாரின் தேடுதல் வேட்டை மற்றும் அதிரடி சோதனை எதற்காக என்பது தெரியவில்லை. இதற்கு போலீசாரிடமும் பதிலில்லை. இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம் என்றார்.

அதே நள்ளிரவில் கோவிலூர் மற்றும் தம்பிக்கோட்டை பகுதியில் சில முக்கிய பிரமுகர்கள் வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் புதன்கிழமை நள்ளிரவு முத்துப்பேட்டை நகர் முழுவதும் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் மெயின் ரோடுகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்: முத்துப்பேட்டை பகுதியில் கூலிப்படையைச் சேர்ந்த சிலர் வந்து தங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டதாக கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.