முத்துப்பேட்டை பெண்ணுக்கு டெங்கு அறிகுறி.முத்துப் பேட்டையில் வசிக்கும் பெண்ணுக்கு டெங்கு அறிகுறி இருந்ததால், அவர் திருவாரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.

முத்துப் பேட்டை கோசா குளத் தெருவை சேர்ந்த அன்பழகன் மனைவி பிரபா (40). இவர் உடல் நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் தஞ்சை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவ மனையில் இருந்து பிரபாவுக்கு போன் வந்தது. அதில் பிரபாவின் ரத்தத்தில் டெங்கு அறிகுறி இருப்பது தெரிவதால் உடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கும் படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து பிரபா திருவாரூர் அரசு மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். முத்துப் பேட்டை அரசு மருத்துவ மனை மருத்துவ குழுவினர் பிரபா வீட்டுக்கு சென்று சுகாதார நடவடிக்கை மேற் கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.