மௌத்து அறிவிப்பு. இஸ்லாமிய அழைப்பாளர் ஜனாப் செங்கிஸ்கான் அவர்கள்.இஸ்லாமிய அழைப்பாளர் ஜனாப் செங்கிஸ்கான் அவர்கள் மாரடைப்பால் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

புரட்சிகர பேச்சாலும், ஆற்றல் மிகு எழுத்தாழும், சத்திய இஸ்லாமிய கருத்துக்களை எட்டுத் திக்கும் எடுத்துரைத்த இஸ்லாமிய அழைப்பாளர் செங்கிஸ்கான் அவர்கள்  (21-ரபீவுல் அவ்வல்-1437) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் சென்னையில் திடீர் மாரடைப்பால் அவர் வஃபாத்தானார் - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் இளயாங்குடியிலுள்ள புதூரில் பிறந்தார். இரண்டு ஆண் மக்களுக்கு தந்தையான அவருக்கு வயது 45. கடந்த 2 வருடங்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட அல்குர்ஆனை பிரதிகளை பிறமத சகோதரர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு காரணமாக இருந்தவர்.

இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி பற்றிய கருத்துக்களை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர். மதங்களைக் கடந்த அவரது நட்பு வட்டாரம் மகத்தானது. அவரது மறுமை வாழ்வு சிறக்க துஆச் செய்வோம். அவர் விட்டுச் சென்ற வீரியமிகு இஸ்லாமிய அழைப்புப் பணியை நாம் தொடர்வோம் - இன்ஷா அல்லாஹ்.

அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று சனிக்கிழமை, சென்னை ராயப் பேட்டை பள்ளிவாயில் கபுர்ஸ்தானில், அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

மகத்தான அழைப்புப் பணியாளரின் மரண சேதி கேட்டு நொடிந்து போனேன். 01/01/2016 இந்த புது வருடப் பிறப்போடு தன் இறப்பும் உண்டு எனஅவர் அறிந்திருக்க மாட்டார். இருப்பினும் முகநூலில் அவர் பதித்த வார்த்தைகள் எவ்வளவு கருத்தாழம் கொண்டவை இதோ செங்கிஸகான் எனும் மாமனிதனின் ஆதங்கம் அல்லது அறிவுரை...

விடிய விடிய பீப் பாடலோடு குத்தாட்டம் !
விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்!
கடந்த வாரம் பீப் பாடலுக்கு கொதித்த சென்னையா இது ?
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையா இது?
மனசாட்சி கொண்ட மனிதர்களை கண்டோம் வெள்ளத்தில்
மனசாட்சியற்ற மனிதர்களை கண்டோம் புத்தாண்டில் !
சகலத்தையும் இழந்து நிற்கும் சக மனிதன் குறித்த
கவலையின்றி எப்படி கும்மாளம் போட முடிகிறது ?
அறிவுக்கு பொருத்தமில்லாத,
பொருளாதார விரயம் செய்கின்ற
இந்திய கலாசாரத்திற்கு சம்மந்தமில்லாத
ஆண்டுக் கொண்டாட்டம் கும்மாளங்களில் இருந்து
எங்களைக் காத்த இறைவனுக்கே புகழனைத்தும்!
முஸ்லிமல்லாத சகோதார்களே சிந்தியுங்கள் !
உங்களை வெள்ளத்தில் இருந்து காத்த
உங்களின் பசிக்கு உணவளித்த
உங்களுக்கு நிவாரப் பொருட்களை வழங்கிய
உங்களின் வீதிகளில் தூய்மைப்பணி செய்த
எந்த முஸ்லிமையும் இந்தப் புத்தாண்டு
கொண்டாட்டங்களில் பார்க்க முடியாது !
ஏன் எனில்
பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதையே
படைத்தவன் எங்களுக்கு கொண்டாட்டமாக
ஆக்கியுள்ளதை எங்களின் இரு பெருநாளிலும்
நீங்கள் கண்கூடாகக் காணலாம் !
குடிப்பதும் வெடிப்பதும் குத்தாட்டம் போடுவதும்
பண்டிகைகள் இல்லை!அதனால் எந்தப் பயனுமில்லை !
இல்லாதவர்க்கு வழங்குதலும்
இறைவனை வணங்குதலுமே
இஸ்லாம் கூறும் பண்டிகைகள் !
-செங்கிஸ்கான்.அழகிய தாவாக்கு சொந்தகாரர்..


இந்த துவாவை அவர்காக ஓதுங்கள்

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி

பொருள் : இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.