சென்னையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது.தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். செல்போன் கடை வைத்துள்ளார். இவர் கடைக்கு தேவையான ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை வாங்கிக் கொண்டு பர்மா பஜாரில் இருந்து நண்பருடன் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார்.

தங்கச்சாலை புதிய பஸ் நிலையம் அருகே வந்த போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் திடீரென வழிமறித்தனர். அவர்கள் அப்துல் ரகுமானையும் அவரது நண்பரையும் தாக்கி செல்போன்களை பறித்து தப்பி ஓட முயன்றனர்.

அதிர்ச்சி அடைந்த அப்துல் ரகுமான் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 வாலிபர்களையும் விரட்டி சென்றனர். ஒருவன் மட்டும் சிக்கினான். அவனுக்கு தர்ம அடி கொடுத்து ஏழுகிணறு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் கோயம்பேட்டை சேர்ந்த ஜெகன்நாதன் என்பதும் தப்பி ஓடியவர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் பரமேஸ்வரன் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் பரமேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் சிக்கி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான போலீஸ்காரர் பரமேஸ்வரன், அவரது நண்பர் ஜெகன்நாதன் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீஸ்காரர் பரமேஸ்வரன் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சரிவர பணிக்கு செல்லாமல் இருந்து இருக்கிறார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து வேறு கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தனியாக விசாரணை நடந்து வருகிறது. பரமேஸ்வரனின் நண்பர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

பொது மக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீஸ்காரரே கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.