ஜெயிலுக்கு போக ஆசைப்பட்டு மின்சார ரெயிலுக்கு தீ வைத்த வாலிபர்.மும்பை சர்ச்கேட்- மெரின்லைன் இடையே நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயிலில் நேற்று அதிகாலை ரெயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயிலின் பெண்கள் பெட்டியில் தீடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து ரெயிலை சுத்தம் செய்து கொண்டு இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் தீப்பற்றி எரிந்த ரெயில் பெட்டியின் அருகே ஓடிச்சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். அந்த வாலிபரை ரெயில்வே ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் இது குறித்து ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரெயில் பெட்டியில் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர்.

இதனையடுத்து அந்த வாலிபரை போலீசாரிடம் ரெயில்வே ஊழியர்கள் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவரது பெயர் ஆகாஷ்(வயது28) என்பதும், ‘‘குடும்ப பிரச்சினையில் இருந்து தப்பித்து, ஜெயிலுக்கு போகவேண்டும் என்ற ஆசையில் வேண்டுமென்றே ரெயில் பெட்டிக்கு தீ வைத்ததாக கூறினார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

நாக்பூரை சேர்ந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மும்பையில் வேலை இல்லாமல் சுற்றித்திரிந்து உள்ளார். எனவே இதில் ஏற்பட்ட விரக்தியில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என ரெயில்வே போலீசார் கூறினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.