தேசிய கொடியை எரிக்கும் வாட்ஸ்அப் காட்சி.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமானி புகார்.தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் புகைப்படம் பரப்பி வருவதை தடுக்க கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமானி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை குரோம் பேட்டையை சேர்ந்தவர் நவீன் குமார் (29). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

நான் தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக வேலை செய்து வருகிறேன். என்னுடைய வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் நேற்று மதியம் 1 மணி அளவில் ஒரு புகைப்படம் வந்தது. அதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

அந்த புகைப்படத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நமது தேசிய கொடியை தீயிட்டு எரித்து அவமதித்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தையும் பேஸ் புக்கிலும் வாஸ்ட் அப்பிலும் அவர் பதிவு ஏற்றம் செய்தது மட்டும் அல்லாமல், அவரது செல்போன் எண்ணையும் துணிச்சலாக பதிவு செய்துள்ளார்.

இந்த காட்சி பார்ப்போர் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.