புல்லட் ஓட்டி வந்து அசத்திய புது மணப்பெண் ஆயிஷா.குஜராத் மாநில ஆமதாபத்தில் ஒரு திருமண மண்டபத்தில் மணமேடைக்கு புல்லட்டில் வந்து உறவினர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் மணப்பெண். அந்த புதுமைபெண்ணின் பெயர் ஆயிஷா உபத்தியாய் 26 வயதாகும் இவர் கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியையாக உள்ளார்.


வழக்கமாக திருமணத்தின் போது தோழிகள் மற்றும் உறவினர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி அல்லது காரில் மணமகள் ஊர்வலமாக வருவது வழக்கம். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, புல்லட்டில் வந்து அங்கிருந்தவர்களை ஆச்சரியபட வைத்தது.


மணமகள் உடையில் கம்பீரமாக புல்லட்டை ஓட்டியபடி புன்னகையுடன் ஆயிஷா வந்தார். அப்போது பின்னணி இசையில் திருமணமண்டபமே அதிர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ஆயிஷாவுக்கு இவர்தான் உண்மையான புல்லட் ராணி என கூறி உள்ளன.


ஆயிஷாவிற்கு புல்லட் ஓட்டுவது மிகவும் பிடிக்குமாம். தனது 13 வயதில் இருந்தே அவர் பைக் ஓட்டி வருகிறாராம். அதனால் தான் திருமணத்தின் போது ஒரு அலங்கார சிலையைப் போல் வராமல், புல்லட்டில் வந்து அனைவரையும் அசர வைக்க முடிவு செய்தாராம். ஆயிஷாவின் இந்த விருப்பத்திற்கு அவரது பெற்றோரும் குறுக்கே நிற்கவில்லை.


இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால் புல்லட் ராணியாக வலம் வரும் ஆயிஷாவின் கணவருக்கு புல்லட் ஓட்டத் தெரியாதாம். இதனால், திருமண அரங்கிற்குள்ளேயே தனது கணவரையும் புல்லட்டில் அமர வைத்து வலம் வந்தார் ஆயிஷா.454682-bullet-rani Capture12 Capture21 201601281224568377_Like-a-boss-Bride-enters-wedding-hall-on-a-bullet-in_SECVPF.gif as2

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.