முதல்வர் ஜெயலலிதாவுடன் விஜயதாரணி திடீர் சந்திப்பு.தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்தொடர் முடிந்த பிறகு சந்தித்துப் பேசினார்.

விஜயதாரணி காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி காரணமாக முதல்வரை சந்தித்திருக்கலாம் என்றும், அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி. அவர் ஆரம்பத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளராக இருந்தார். இதனால் கட்சி மேலிடம் விஜயதாரணியை தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கடந்த ஆண்டு 19-ம் தேதி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த விஜயதாரணியின் படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுல் காந்திக்கு விஜயதாரணி கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து இளங்கோவன், விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், விஜயதாரணியை தமிழக காங்கிரஸ் மகளிர் பதவியிலிருந்து கட்சி மேலிடம் நீக்கியுள்ளது. மறைந்த காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்தொடர் முடிந்த பிறகு விஜயதாரணி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

முதல்வர் சந்திப்பு குறித்து விஜயதாரணி கூறுகையில், ''முதல்வரிடம் தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். என் பதவி பறிக்கப்பட்டது அநியாயம். இதை கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன்'' என்கிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.