முத்துப்பேட்டை அருகே பரபரப்பு கள்ளச்சாராயம் விற்பனை தடுக்காத போலீசை கண்டித்து செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்.முத்துப் பேட்டை அருகேயுள்ள கடுவெளி சித்தாளத்தூரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (28). இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சங்கேந்தி கடைத்தெருவிற்கு கையில் விடுதலை சிறுத்தை கட்சி கொடியுடன் வந்தார்.

அப்பொழுது தான் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன் என்று கூச்சலிட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் பெரிது படுத்தாமல் அலட்சியமாக இருந்தனர். திடீரென்று அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் செல் டவரில் கொடியுடன் ஏறினார்.

அப்பொழுது அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றனர். ஆனாலும் வேகமாக வாலிபர் மீனாட்சி சுந்தரம் ஏறி செல்டவர் உச்சிக்கு சென்றார்.

இது குறித்து எடையூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் போலீசார் மேல ஏறிய மீனாட்சி சுந்தரத்திடம் எதற்காக மேலே ஏறினாய்? என்று கேட்டனர். அதற்கு வாலிபர் மீனாட்சிசுந்தரம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வந்தால்தான் காரணத்தை சொல்வேன் என்றும், யாராவது மேலே வர முயற்சித்தால் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொள்வதாகவும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வாலிபர் மீனாட்சிசுந்தரத்தின் பெற்றோர் மற்றும் சகோதர்கள், உறவினர்கள் வந்து மீனாட்சிசுத்தரத்திடம் பேசினார். அதற்கும் பதில் செல்லவில்லை. நேரம் ஆனதும் கேள்விப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து முத்துப் பேட்டை டி.எஸ்.பி.அருண் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டனர். தயார் நிலையில் தனியார் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப் பட்டனர். மருத்துவ குழுவினரும் வரவழைக்கப் பட்டனர்.

இரவு சுமார் 7.30 மணியளவில் விசி கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி, ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் அங்கு வந்து தீயணைப்பு வாகனத்தின் மீது ஏறி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர் நான் இறங்கி வருகிறேன். என்ன கோரிக்கை என்பதை உங்களிடமும், பத்திரிகையாளர்களிடம் மட்டும் சொல்கிறேன். செல்போன் டவர் இருக்கும் வளாகத்திற்குள் வாருங்கள் என்றார்.

இதையடுத்து டவர் வளாகத்திற்குள் வி.சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் சென்றனர். பின்னர் இறங்கி வந்த மீனாட்சி சுந்தரம் கூறுகையில், எங்க ஊர் கடுவெளி சித்தாலத்தூரில் கள்ள சாராயம் அதிகளவில் ஆறாக ஓடுகிறது. குறிப் பிட்ட சிலர் இவற்றை விற்கின்றனர். இது போலீசார் உதவியுடன் நடக்கிறது.

மேலும் இப் பகுதியில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினர் மீது உயர் சாதியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கும் போலீசார் நட வடிக்கை எடுக்க மறுக்கின்றனர். அதனால் தான் காவல் துறையை கண்டித்தும், தலைவர் திருமாவளவன் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவும் டவரில் ஏறினேன் என்று கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது போலீசார் வந்து மீனாட்சி சுந்தரத்தை மடக்கி பிடித்து டிஎஸ்பி காரில் ஏற்றினர். பின்னர் எடையூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் திருத்துறைப் பூண்டி தாசில்தார் பழனிவேல் தலைமையில் வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தினர்.

பின்னர் வாலிபர் மீனாட்சி சுந்தரத்திற்கு போலீசார் அறிவுரை வழங்கி, அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.