அதிராம்பட்டினத்தில் மாணவி தற்கொலையில் சீனியர் மாணவி கைது.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் சங்கர். எல்.ஐ.சி. முகவர். இவரது மகள் சுலோச்சனா (19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். என்.சி.சி.யிலும் இருந்து வந்தார்.

என்.சி.சி. பயிற்சியின் போது சீனியர் மாணவிகள் கிண்டல் செய்ததால் சுலோச்சனா மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசு தின விழாவின் போது கல்லூரி ஓய்வறைக்கு சென்ற சுலோச்சனா அங்கு மின் விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மாணவியின் தந்தை அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ஜலால், என்.சி.சி. அலுவலர் கணபதி, என்.சி.சி. பிரிவிலுள்ள சீனியர் மாணவி ராஜ் கலா ஆகிய 3 பேர் மீது சுலோச்சனாவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்கள் 3 பேரிடமும் பட்டுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேனன் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து சீனியர் மாணவி ராஜ் கலாவை போலீசார் கைது செய்தனர்.

இவர் நரசிங்கபுரத்தை சேர்ந்த விவசாயி மகள் ஆவார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.