ஒழுங்கின்மையில் ஈடுபடும் பயணிகள் விமானம் தரையிறங்கும் வரையில் சீட்டுடன் கை விலங்கிடப்படுவார்கள்..விமானத்தில் ஒழுங்கின்மையில் ஈடுபடும் பயணிகளை தடுக்கும் விதமாக, அவர்களது சீட்டில் கைவிலங்கு பூட்டப்படும் நடவடிக்கையானது அமலுக்கு வருகிறது.


விமானங்களில் பயணிகள் முரட்டுதனமாக நடந்துக் கொள்ளும் சம்பங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியா விமானங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு கை விலங்கை எடுத்துச் செல்ல விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.


இதுபோன்ற நடவடிகையில் ஈடுபடும் பயணிகளின் கைகள் சீட்டுடன் விலங்கிடப்படும் என்று ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம், அதற்கான சாதனங்களை எடுத்து செல்ல விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.


ஜெட் ஏர்வேஸ் அதிகாரி பேசுகையில், “2015-ம் ஆண்டு இறுதியில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சம்மதம் வழங்கியது. தேவைப்படும் போது விமானத்தின் பாதுகாப்புக்காக நாங்கள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வோம், விரைவில் பின்பற்றப்படும்,” என்று கூறிஉள்ளார்.


மத்திய விமான போக்குவரத்து இயக்குநரக வழிகாட்டுதலின்படி, விமான பணி ஊழியர்கள் சூழ்நிலையை தணிக்க முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனையை சம்மாளிக்க பேச்சுவார்த்தை மற்றும் எழுத்துப்பூர்வமான நோட்டீஸ் பயனளிக்காத நிலையில் கைவிலங்கை பயன்படுத்தவேண்டும் என்று இண்டிகோ தெரிவித்து உள்ளது.


சமரசம் செய்வதற்கான நடவடிக்கைகள் நீர்த்துபோன நிலையிலே தடுப்பு சாதனத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பயணியின் நடவடிக்கையானது விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையில், அவர்களது சீட்டில் கைவிலங்கிட்டு தடுக்கவேண்டும். இண்டிகோ, அனைத்து விமானங்களிலும் நைலான் கயிறுகளை தடுப்பு நடவடிக்கைக்காக கொண்டு செல்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.


ஸ்பைஸ்ஜெட் கைவிலங்குகளை எடுத்து செல்கிறது. விஸ்டாராவும் தடுப்பு நடவடிக்கைக்கான உபகரணங்களை விமானத்தில் எடுத்துச் செல்வதாக குறிப்பிட்டு உள்ளது. விமானத்தில் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்ளும் பயணிகள் விமானம் தரையிறங்கும் வரையில் சீட்டுடன் கைவிலங்கியிடப்பட்டு வைக்கப்பட்டு இருப்பார்.


கடந்த சனிக்கிழமை அன்று ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் ஒரு குரூப்பாக இண்டிகோ விமானத்தில் ராய்பூருக்கு சென்று உள்ளனர். அவர்கள் இடையே விமானத்தில் இருக்கும் சீட்களை பகிர்ந்துக் கொள்வதில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து விமான பணியாளர்கள் மற்றும் குழுவில் இருந்தவர்கள் இடையே வார்த்தை போர் வெடித்தது.


பின்னர் விமான ஊழியர்கள், விமானநிலைய அலுவலக உதவியை நாடிஉள்ளனர். நிலையானது மிகவு மோசமானது, பயணிகளை வெளியேற்றும் நிலையும் காணப்பட்டது என்று விமானநிலைய போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பயணிகளில் ஒருவர், விமான பணியாளர்கள் தவறாக நடந்துக் கொண்டனர் என்று குற்றம் சாட்டினார். பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.