முத்துப்பேட்டையில் பொங்கல் பொருட்கள் வழங்க மறுத்ததால் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள்முத்துப் பேட்டை அடுத்த பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் இலவச பொருட்கள் நேற்று முதல் வழங்குவதாக அறிவிக்கப் பட்டது. இதனால் ரேஷன் கடையில் நேற்று காலை நூற்றுக் கணக்கான பெண்கள் உட் பட பொது மக்கள் குவிந்தனர்.

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச பொருட்கள் வழங்கப் பட்டது. இந் நிலையில் திடீரென ஊழியருக்கு செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து 2 சமையல் சிலிண்டர் உள்ள குடும்ப அட்டைகளுக்கும், புதிய அட்டைகளுக்கும் இலவச பொருட்கள் கிடையாது என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், ரேஷன் கடை ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர். பின்னர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொது மக்கள் கூச்சலிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பேரூராட்சி கவுன்சிலர் சேவியர், முன்னாள் கவுன்சிலர் கணேசன் ஆகியோர் அங்காடி ஊழியரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ரேஷன் கடை ஊழியர், அனைத்து குடும்ப அட்டைக்கும் இலவச பொருட்கள் கொடுக்க சம்மதித்தார்.

இது குறித்து ரேசன் கடை ஊழியர் தரப்பில் கூறுகையில்: இந்த ரேஷன் கடையில் 844 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 3 குடும்ப அட்டைகள் போலீஸ் துறையை சேர்ந்தது. மீதம் 841 குடும்ப அட்டைகளுக்கு சீனி, அரிசி, கரும்புகள் வந்தது.

ஆனால் 779 குடும்ப அட்டைகளுக்கு தான் 100 ரூபாய் வீதம் பணம் வந்துள்ளது. மீதம் 62 குடும்ப அட்டைகளுக்கு ரூ.6200 குறைவாக அதிகாரிகள் தந்துள்ளனர் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.