யாருக்கும் பயப்படாமல் தைரியமாக வாக்களிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு.தேர்தல்களின்போது அரைக்கால் டிரவுசர் அணிந்து, கைகளில் லத்தியுடன் சாலைகளுக்கு வருபவர்களின் மிரட்டலுக்கு பயப்படாமல் தைரியமாக வாக்களிக்க முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதி கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் புறநகர் பகுதியான சார்கெஜ் என்ற இடத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது பட்டேல், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பாரத்சின்ஹ் சோலாங்கி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி அஜிஸ் முஷாபர் அஹமதி பேசியதாவது:-

அரைக்கால் டிரவுசர் அணிந்து, கைகளில் லத்தியுடன் சாலைகளுக்கு வருபவர்களை கண்டு பயந்து விடாதீர்கள். தேர்தல் காலங்களில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த இப்படி வருவார்கள், அது அவர்களின் தேர்தல் செயல்பாட்டில் ஒருபகுதி. தேர்தல்கள் முடிந்த பின்னர் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

ஆனால், இடையில் தேர்தல் நடைமுறைகளின்போது அவர்களின் மிரட்டலுக்கு பயப்படாமல் இருக்க வேண்டும். பயத்தால் நீங்கள் வாக்களித்தால் அது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுப்ரீம் கோர்ட்டின் 26-வது தலைமை நீதிபதியாக அக்டோபர் 1994 முதல் மார்ச் 1997 வரை பதவிவகித்த அஜிஸ் முஷாபர் அஹமதி(83), இவ்விழாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது குஜராத் மாநிலத்தில் கல்வியின் தரம் சீரழிந்து வருவதைப்பற்றி சுட்டிக்காட்டினார்.

புதிய பள்ளிகளையும், தொழிற்சாலைகளையும் அமைப்பது மட்டும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாகிவிடாது. கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டும். காலியாக கிடக்கும் ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். குஜராத்தில் உள்ள 60 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இந்தநிலை மாற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.